மொறு மொறு காராசேவு ஸ்னாக்ஸ்...! வீட்டிலேயே எப்படி செய்யலாம்..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்.

மொறு மொறு காராசேவு ஸ்னாக்ஸ்...! வீட்டிலேயே எப்படி செய்யலாம்..?
காராசேவு
  • Share this:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காராசேவு ஸ்னாக்ஸை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 கப்


அரிசி மாவு - 1/4 கப்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
மிளகு - 1 tspசீரகம் - 1/2 tsp
உப்பு - தே . அளவு
காய்ச்சிய நெய் - 2 tsp
சோடா உப்பு - ஒரு சிட்டிகைசெய்முறை :

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒரு பேசனில் சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள்.

மிளகு மற்றும் சீரகத்தை இடித்து போடுங்கள். மாவு சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.

அடுத்ததாக கடாயில் வறுக்க எண்ணெய் ஊற்றி காய்ச்சிக்கொள்ளுங்கள்.

போர் அடிச்சா மாலையில் சூடாக தேங்காய் பால் கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க..!

காய்ந்ததும், வீட்டில் சல்லிடைக் கரண்டி இருந்தால் அதில் இரு புறமும் எண்ணெய் தேய்த்துக்கொள்ளுங்கள். பின் அதன் குழிப் பகுதியில் மாவை வைத்து எண்ணெய் மேல் தேய்த்து தூவ நீளவாக்கில் விழும்.

பின் அவை பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் காராசேவு தயார்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading