Home /News /lifestyle /

காராமணி பொரியல் எப்படி செய்வது..? இதோ ரெசிபி..!

காராமணி பொரியல் எப்படி செய்வது..? இதோ ரெசிபி..!

காராமணி பொரியல்

காராமணி பொரியல்

காராமணி பொரியல் காரக் குழம்பு போன்ற காரமான குழம்பு வகைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

    காராமணி பொரியல் காரக் குழம்பு போன்ற காரமான குழம்பு வகைகளுக்குப் பொருத்தமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    காராமணி - 300 கிராம்
    எண்ணெய் - 1 tsp
    கடுகு - 1 tsp
    உளுத்தம் பருப்பு - 1 tsp
    மஞ்சள் பொடி - 1/2 tsp
    பெருங்காயத் தூள் - 1/4 tsp
    கறிவேப்பிலை - சிறிதளவு
    துருவிய தேங்காய் - 2 tsp
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தே.அளவு

    செட்டிநாடு கத்தரிக்காய் தொக்கு : கொஞ்சம் சாப்பிட்டாலும் சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும்



    செய்முறை :

    சமைக்கும் முன் தேங்காயையும் , காய்ந்த மிளகாயையும் மிக்ஸியில் ஓட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து காராமணியை சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு இரண்டு டேபில் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மூடி வையுங்கள். இரண்டு விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.

    வானலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள்.

    கடையில் தயிர் வாங்குவதை விட வீட்டிலேயே ஃபிரெஷாக தயாரிக்கலாம் : எப்படி செய்வது?

    பின் கருவேப்பிலை , பெருங்காயத்தூள் சேருங்கள். அடுத்ததாக வேக வைத்த காராமணியை கொட்டி உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கிளறுங்கள்.

    தட்டு போட்டு மூடி 10 நிமிடங்களுக்கு வேக வையுங்கள். வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கிவிடுங்கள்.

    அவ்வளவுதான் காராமணி பொரியல் தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி