நீங்கள் அரைக்கும் காரச்சட்னியை சுவையாக மாற்ற இப்படி செய்து பாருங்கள்

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வதக்கி அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் அரைக்கும் காரச்சட்னியை சுவையாக மாற்ற இப்படி செய்து பாருங்கள்
காரச்சட்னியை
  • Share this:
தோசை, இட்லி என இரண்டிற்கும் பொருத்தமான காரச்சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வதக்கி அரைக்க


எண்ணெய் - 2 tsp
பூண்டு - 5
வெங்காயம் - 8காய்ந்த மிளகாய் - 12
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கல் உப்பு - தே.அ
புளி - நெல்லிக்காய் அளவு
பொட்டுக் கடலை - 1 tbsp

தாளிக்க :

எண்ணெய் - 1 tsp
கடுகு - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/2 tspசெய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வதக்கி அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

அனைத்தும் நன்கு வதங்கி சுருங்கியதும் அடுப்பை அணைத்து அவற்றை காய வையுங்கள். சூடு தணிந்ததும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

வித்தியாசமான சுவையில் ’பீட்ரூட் சட்னி’ : எப்படி செய்வது..?

இறுதியா சட்னி அரைத்ததும் தாளித்த பொருளை அப்படியே ஜாரில் கொட்டி சட்னியோடு ஒரு ஓட்டு ஓட்டி எடுங்கள்.

இவ்வாறு தாளித்த எண்ணெய்யை ஓட்டி எடுப்பதில்தான் இந்த சட்னியின் சுவை உள்ளது. அவ்வளவுதான் சுவையான சட்னி தயார்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading