ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காரா பூந்தி செய்வது இவ்வளவு சுலபமா..? நீங்களும் செஞ்சு பாருங்க..!

காரா பூந்தி செய்வது இவ்வளவு சுலபமா..? நீங்களும் செஞ்சு பாருங்க..!

காரா பூந்தி

காரா பூந்தி

கடையில் வாங்கி செய்வதைக் காட்டிலும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் அதில் கிடைக்கும் ருசியே தனிதான்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடைகளில் காரா பூந்தி விற்பனைக்கு பஞ்சம் இருக்காது. ஆனாலும் கடையில் வாங்கி செய்வதைக் காட்டிலும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் அதில் கிடைக்கும் ருசியே தனிதான். நீங்களும் செய்து சாப்பிட ஆசை பட்டால் எப்படி செய்வது என்று மேலும் படியுங்கள்.

  தேவையான பொருட்கள் :

  கடலை மாவு - 4 கப்

  தண்ணீர் - ஒரு கப்

  உப்பு - தேவையான அளவு

  மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

  வறுத்த நிலக்கடலை - அரை கப்

  கறிவேப்பிலை - சிறிதளவு

  பூண்டு - 5 பற்கள்

  எண்ணெய் - வறுக்க

  சல்லடை கரண்டி

  செய்முறை :

  கடலை மாவில் கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவைக் கரையுங்கள். மாவானது தோசை ஊற்றும் பதத்தில் இருக்க வேண்டும்.

  அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வையுங்கள்.

  காய்ந்ததும் சல்லடைக் கரண்டி அல்லது ஓட்டைகள் இருக்கும் கிண்ணம் என மாவை ஊற்றி கைகளால் தேய்க்க கரண்டி வழியாக உதிரி உதிரியாக எண்ணெயில் மாவு விழும்.

  மொறுமொறு சுவையில் மசால் வடை.. சூப்பராக செய்வதற்கு இதோ ரெசிபி...!

  பின் அவை பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடுங்கள். இப்படி மாவு காலியாகும் வரை செய்யுங்கள். அடுத்ததாக எண்ணெயில் கடலை, கருவேப்பிலை தாளித்து அதில் போடுங்கள்.

  பின் மிளகாய் தூள், உப்பு மற்றும் இடித்த பூண்டு சேர்த்து கலக்கி எடுங்கள். பூண்டை, மிளகாய் தூளுடன் கலந்து போட்டால் நன்றாக இருக்கும்.

  அவ்வளவுதான் காரா பூந்தி தயார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: