சப்பாத்தி , நாண் வகை ரொட்டிகளுக்கு பொருத்தமாக இருக்கும் கடாய் பனீரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பனீர் (காட்டேஜ் சீஸ்) - 200 கிராம்
மிளகாய் தூள் - 1.5 டீஸ்பூன்
கேப்சிகம் - 1
வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
இலை - 1
இலவங்கப்பட்டை - 1 துண்டு
மிளகு - 5-6
ஏலக்காய் - 2
பூண்டு - 5-6
இஞ்சி - 1/2 துண்டு
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தே.அ
உப்பு - தே.அ
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
முதலில் பனீரை மிளயா தூள் , கரம் மசாலா சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள்.
பின் அதை கடாயில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக இருபுறமும் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் எண்ணெயில் கண்ணாடி பதத்தில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து வெங்காயம் தக்காளி, பூண்டு , இஞ்சி, மிளகு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
பாசிப்பருப்பில் கூட தோசை வரும் தெரியுமா? கட்டாயம் ட்ரை பண்ணுங்க!
பச்சை வாசனை போனதும் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாய் வைத்து பட்டை, இலை சேர்த்து வதக்குங்கள். பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி எண்ணெய் சுருங்கி வரும்போது பனீர் மற்றும் வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து பிறட்டி விட்டு 1 நிமிடம் வேக வையுங்கள்.
அவ்வளவுதான் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கடாய் பனீர் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.