ஜல்ஜீரா - மிகவும் எளிமையான அதே சமயம் எக்கச்சக்கமான நன்மைகளை வழங்கும் ஒரு கோடைகால பானம் ஆகும். இது எவ்வளவுக்கு எவ்வளவு ஆரோக்கியமானதோ, அதே அளவு சுவையானதும் கூட. இந்த கோடைகால பானம் நாவின் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பை சரிசெய்வது தொடங்கி 'வெயிட் லாஸ்' வரை பல நன்மைகளை வழங்குகிறது.
மிகவும் பொதுவாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கோடைகால பானத்தை, நீங்கள் உங்கள் வீட்டிலேயே கூட தயார் செய்யலாம்.
ஜல்ஜீரா பொடியை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
4 டீஸ்பூன் மிளகுத்தூள்,
4 டீஸ்பூன் வறுத்த சீரகம்,
2 டீஸ்பூன் கருப்பு மிளகு,
2 டீஸ்பூன் சிட்ரிக் அசிட்,
1 டீஸ்பூன் இஞ்சி தூள்,
1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,
4 கருப்பு ஏலக்காய்,
2 டீஸ்பூன் பிளாக் ராக் சால்ட்
2 டீஸ்பூன் உப்பு
மேற்கண்ட அனைத்தையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து தூளாகும் வரை நன்றாக அரைக்கவும். பிறகு ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில், அரைக்கப்பட்ட 1 டீஸ்பூன் ஜல்ஜீரா பொடியை சேர்த்து, நன்கு கலக்கினால் - ஃபிரெஷ் ஆன ஜல்ஜீரா ரெடி!
ஜல்ஜீராவின் நன்மைகள் :
இது இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது :
சீரகம் இரும்புச்சத்து நிறைந்தது, எனவே கோடை மாதங்களில் ஜல்ஜீராவை வழக்கமாக உட்கொள்வது இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, சீரகம் இரத்த சிவப்பணுக்கள் (RBCs) உருவாவதை ஊக்குவிக்கிறது, இதனால் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் ஓட்டம் தங்குதடையின்றி நடக்கும்.
ஏன் வைட்டமின் டி-ஐ வைட்டமின் கே உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்..?
மாதவிடாய் வலியை போக்கும் :
பெண்களுக்கு, கோடை மாதங்களில் ஏற்படும் மாதவிடாய் மிகவும் வேதனையாக இருக்கும். அந்த நேரத்தில் இந்த பானத்தை குடித்தால், மென்சுரல் க்ராம்ப்ஸ் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை சற்றே சமாளிக்கலாம். மேலும் இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டல் மற்றும் தலைச்சுற்றலில் இருந்தும் விரைவாக ஓய்வளிக்கும்.
'மார்னிங் சிக்னஸ்' வராமல் தடுக்கிறது :
கர்ப்பிணிப் பெண்கள் ஒரு கிளாஸ் ஜல்ஜீராவுடன் அவர்களின் நாளை தொடங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள், ஏனெனில் இது மார்னிங் சிக்கஸ் மற்றும் மயக்கத்தை தடுக்க உதவுகிறது. மேலும் இது உங்களை புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
எடை இழப்புக்கு உதவுகிறது :
நிபுணர்களின் கூற்றுப்படி, இது குறைவான கலோரிகளை கொண்டுள்ளது மற்றும் ஜல்ஜீரா பொடியில் உள்ள சீரக விதைகள் பசியை அடக்கி, நீண்ட நேரத்திற்கு உங்களை 'ஃபுல்' ஆக வைத்திருக்கும்.
வாயு மற்றும் அஜீரணத்தை குணப்படுத்துகிறது :
கோடை மாதங்களில் அசிடிட்டி மற்றும் அஜீரணத்தால் அவதிப்படுபவர்களுக்கு, ஜல்ஜீரா ஒரு சிறந்த தீர்வாக இருக்கும், ஏனெனில் இது அசிடிட்டி, ப்ளோட்டிங் மற்றும் பிற இரைப்பை சார்ந்த பிரச்சினைகளை போக்க உதவுகிறது. மிளகு, சீரகம் மற்றும் கருப்பு உப்பு ஆகியவற்றின் இந்த கலவையானது மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற பிற இரைப்பை குடல் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஒரு டிடாக்ஸ் ஏஜென்ட் ஆகவும் செயல்படுகிறது!
ஜல்ஜீராவின் நுகர்வு உங்கள் ஒட்டுமொத்த 'வாட்டர் கன்சம்ப்ஷனை' அதிகரிக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. இந்த பானத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், 'ஸ்கர்வி' போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் சிறந்த பானமாக அமைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy juice