15 நிமிடங்களில் அவசரத்திற்கு குக்கரிலேயே சாம்பார் எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 7
மஞ்சள் - 1/2 tsp
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தே.அ
காய்கறிகள்
சாம்பார் பொடி - 3 tsp
மிளகாய் தூள் - 1 tsp
புளி - சிறிதளவு
தக்காளி - 1
பூண்டு - 6 பற்கள்
தாளிக்க :
கடுகு - 1 tsp
சீரகம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
பெருங்காயத்தூள் - 1/2 tsp
கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
துவரம்பருப்பைக் கழுவி குக்கரில் போட்டுக்கொள்ளுங்கள்.புளி ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதிலேயே சின்ன வெங்காயம், மஞ்சள், தக்காளி, பூண்டு ,உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும்வரை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
விசில் வந்ததும் விசிலைத் திறந்துவிட்டு பருப்பை குக்கரிலேயே கடைந்துகொள்ளுங்கள்.
செட்டிநாடு சுவையில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது..?
பின் அதிலேயே நறுக்கிய காய்கறிகள், மிளகாய் பொடி, சாம்பார் பொடி , உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
புளித்தண்ணீருடன் சேர்த்து, நீங்கள் சேர்த்துள்ள காய்கறி அளவுக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றுங்கள்.
மீண்டும் குக்கரை மூடிவிட்டு 1 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது?
தாளிப்பதற்கு வானலி வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துவிடுங்கள்.
குறிப்பு : பருப்பு தனியாக வேக வைக்கவேண்டாம் எனில் பருப்பு சேர்க்கும்போதே காய்கறிகள், சாம்பார் பொடி , உப்பு, புளி தண்ணீர் என அனைத்தையும் மொத்தமாக சேர்த்து 3 விசில் வரும்வரை அணைத்துவிடுங்கள்.
பின் வானலி வைத்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பின்குறிப்பு: இந்த முறையில் செய்வதாக இருந்தால், பருப்பை அரை மணிநேரத்துக்கு முன்பாக ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.