முகப்பு /செய்தி /lifestyle / இப்படி புளியோதரை பொடி செஞ்சு வச்சா, புளியோதரை செய்ய 5 நிமிஷம் போதும்!

இப்படி புளியோதரை பொடி செஞ்சு வச்சா, புளியோதரை செய்ய 5 நிமிஷம் போதும்!

Instant Tamarind Rice

Instant Tamarind Rice

புளியோதரை பொடி இப்படி ஈஸியா செஞ்சு வச்சா, 5 நிமிசத்தில் டக்குனு ஐயர் வீட்டு புளியோதரை செய்யலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புளியோதரை நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்று. அதுவும் கோயிலில் கொடுக்கும்  புளியோதரை என்றால் நாம் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். எப்படி இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு சூப்பரா புளியோதரை செய்கிறார்கள் என நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். சூப்பரான கோயில் ஸ்டைல் புளியோதரை செய்ய, இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி தயார் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1 கப்.

தனியா – 1/4 கப்.

உளுத்தம் பருப்பு – 1/2 கப்.

வெந்தயம் - 1 ஸ்பூன்.

மிளகு – 1 ஸ்பூன்.

கடுகு – 1 ஸ்பூன்.

எள்ளு – 2 டீஸ்பூன்.

சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

புளி - நெல்லிக்காய் அளவு.

பெருங்காயம் – சிறிதளவு.

வரமிளகாய் – 50கி.

கல் உப்பு – 3 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடலைப் பருப்பு, தனியா (முழு மல்லி), உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, கடுகு, எள்ளு சேர்த்து நன்றாக வறுக்கவும்.

வதக்கிய பொருட்களை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். பின்னர், இதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பெருங்காயம் மற்றும் வரமிளகாயை சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதேப்போன்று, புளி மற்றும் கல் உப்பு ஆகியவற்றை அதே கடாயில் எண்ணெயுடன் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்து நன்கு ஆற விடவும்.

இந்த வறுத்த பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

நன்கு அரைத்த இந்த பொடியுடன் இறுதியாக மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயப் பொடி சேர்த்து கலந்து வைத்தால் இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி தயார். இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த புளியோதரை பொடியுடன், சிறிதளவு வேர்க்கடலையையும் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், வேர்கடலை சேர்த்த பொடி அதிக நாட்களுக்கு தாக்கு பிடிக்காமல், விரைவில் கெட்டு விடும். எனவே, புளியோதரை சாதம் செய்யும்போது வேர்க்கடலையை வறுத்து சேர்த்துக்கொள்ளவும்.

First published:

Tags: Food, Food recipes, Tamarind