Home /News /lifestyle /

ஐந்தே நிமிடத்தில் காலை உணவு தயார்: என்ன டிஷ் எப்படி செய்வது என தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க

ஐந்தே நிமிடத்தில் காலை உணவு தயார்: என்ன டிஷ் எப்படி செய்வது என தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க

பிரெட் சில்லி மஞ்சூரியன்

பிரெட் சில்லி மஞ்சூரியன்

உடனே ஏதாவது காலை உணவு தயார் செய்ய வேண்டும் எனில் இந்த உணவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

    காலையில் அவசர வேலை... உடனே ஏதாவது காலை உணவு தயார் செய்ய வேண்டும் எனில் இந்த உணவு உங்களுக்கு உதவியாக இருக்கும். பிரெட் சில்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 4 துண்டுகள்
    பட்டர் - 2 tbsp
    வெங்காயம் - 2
    குடைமிளகாய் - 1
    பச்சை மிளகாய் - 2
    சில்லி சாஸ் - 2 tbsp
    டொமேடோ சாச் - 1/2 கப்
    சோயா சாஸ் - 1 tsp
    உப்பு - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    பிரெட் துண்டுகளை தவாவில் பட்டர் விட்டு சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக கட் செய்துகொள்ளுங்கள். கடாய் வைத்து பட்டர் விட்டு வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    வதங்கியதும் அதில் டொமேடோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்குங்கள். மசாலா நன்கு கலந்ததும் பிரெட் துண்டுகளை சேருங்கள்.

    மாலையில் சூடாக சாப்பிட உருளைக்கிழங்கு போண்டா..! இப்படி செஞ்சு பாருங்க அருமையாக இருக்கும்

    பிரெட் துண்டுகள் உடையாதவாறு மசாலா சேருமாறு பிரட்டுங்கள். பிரெட் மசாலாவில் ஊறி நல்ல சுவையில் வரும் அப்போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் நொடியில் பிரெட் சில்லி மஞ்சூரியன் தயார்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Bread, Bread recipes

    அடுத்த செய்தி