எளிமையான முறையில் அதுவும் சில நிமிடங்களிலேயே செய்யக் கூடிய குழம்பு வகைகளில் மோர் குழம்பும் ஒன்று. அதுவும் தொடங்கியிருக்கும் கோடைக்காலத்தில் மோர்க்குழம்பு அடிக்கடி சாப்பிட வேண்டியது இருக்கும். உடல் குளுர்ச்சிக்கும் மோர் மிகவும் அவசியம். எனவே நீங்கள் அடிக்கடி மோர் குழம்பு செய்யப் போகிறீர்கள் எனில் இந்த இன்ஸ்டன்ட் மோர் குழம்பு பொடியை செய்து வைத்துக்கொள்வது நல்லது. சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 2 tsp
கடலைப்பருப்பு - 1 tsp
தனியா - 1 tsp
மிளகு - 1/2 tsp
சீரகம் - 1 tsp
வெந்தயம் -1/4 tsp
அரிசி மாவு - 1/2 tsp
தேங்காய் துருவல் - 2 tsp
காய்ந்த மிளகாய் - 5 tsp
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
உப்பு - 1 tsp
கடுகு - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
முதலில் கடாய் வைத்து எண்ணெய் இல்லாமல் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, மிளகு , சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்,
பின் காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஈரப்பதம் நீங்க வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடுகு மற்றும் கறிவேப்பிலையை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடுகு மற்றும் கறிவேப்பிலை தவிற மற்ற அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அசைவ சுவையில் காய்கறி மசாலா குழம்பு.. ஒரு முறை செஞ்சு பாருங்க...
அரைத்ததும் இறுதியாக மஞ்சள் தூள், கடுகு, கறிவேப்பிலை, அரிசி மாவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின் அதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பொடியை மோர் குழம்பு செய்யும் போது தயிருடன் கலந்து தாளித்து ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கினால் போதும். மோர்குழம்பு தயாராகிவிடும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.