• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அரிசி மாவு இல்லாமல் சுவையான தோசை சுடலாம்.. ரெசிபி இதோ..

அரிசி மாவு இல்லாமல் சுவையான தோசை சுடலாம்.. ரெசிபி இதோ..

காட்சி படம்

காட்சி படம்

அரிசி மாவு இல்லாமல் தோசை சுட வேண்டுமா ? அப்ப இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..

  • Share this:
    இந்த இன்ஸ்டன்ட் தோசை என்பது திணை வகைகளில் ஒன்றான சாமையில் செய்யப்படுவதாகும். சாமையில் பல வகையான நன்மைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை கொடுக்கலாம். உடலுக்கு தேவையான ஆற்றலும் உள்ளது. கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சாமை - 1 கப்
    தேங்காய் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    காலையில் தோசை சுட வேண்டும் எனில் இரவு தூங்கும் முன் சாமையை ஊற வைத்துவிடுங்கள்.

    மறு நாள் காலை கழுவி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பும் கலந்துகொள்ளுங்கள்.

    Also Read : குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை இடியாப்பம்...



    தோசை பதத்திற்கு ஏற்ப அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள். இட்லி எனில் தண்ணீர் குறைத்துக்கொள்ளுங்கள்.

    அவ்வளவுதான் அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தோசை சுடலாம்.

    இதற்கு வேர்க்கடலை சட்னி, கெட்டி சட்னி பொருத்தமாக இருக்கும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: