ஐந்தே நிமிடத்தில் மாங்காய் ஊறுகாய்.. நாவூறும் சுவையில் எப்படி செய்வது?

மாங்காய் ஊறுகாய் பிரியர் எனில் உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

ஐந்தே நிமிடத்தில் மாங்காய் ஊறுகாய்.. நாவூறும் சுவையில் எப்படி செய்வது?
மாங்காய் ஊறுகாய்
  • Share this:
மாங்காய் ஊறுகாய் என்றாலே நாவூறும். அதை எந்த குழம்புக்கும் தொட்டுக்கொள்ளலாம். சிலர் வெறுமனே சாப்பிடுவார்கள். அப்படி நீங்களும் மாங்காய் ஊறுகாய் பிரியர் எனில் உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

தேவையான பொருட்கள்

மாங்காய் - 3


நல்லெண்ணெய் - 1 கப்
மிளகாய் தூள் - 1 கப்
உப்பு - 1 கப்பெருங்காயத்தூள் - 1 1/2 tsp
கடுகு - 2 tbsp
வெந்தையம் - 1 tbsp
மஞ்சள் 1 tsp
பூண்டு - 1



செய்முறை :

மாங்காயை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள். கடுகை அப்படியே அரைத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள். பூண்டையும் தனியாக மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

காலை உணவை ஹெல்தியாக்க ’ஊத்தாப்பம்’ - சுவையாக செய்ய ரெசிபி

தற்போது பெரிய கிண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் ஒன்றாக கொட்டுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது அரைத்த பூண்டு பேஸ்ட்டையும் சேருங்கள். அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பின்பு நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவை கிளறி பிரட்டுங்கள்.

இறுதியாக நல்லெண்ணெய்யை காய்ச்சி கலவையில் ஊற்றி சூடு பதத்துடன் கிளறுங்கள்.

அவ்வளவுதான் நொடியில் மாங்காய் ஊறுகாய் ரெடி.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading