இன்ஸ்டண்ட் இட்லிப் பொடி ரெசிபி... சுலபமாகச் செய்யலாம்!

இல்லத்தரசிகள் முதல் பேச்சுலர்ஸ் வரை இட்லிப் பொடி என்பது வரம் போன்றது.

news18
Updated: April 16, 2019, 4:06 PM IST
இன்ஸ்டண்ட் இட்லிப் பொடி ரெசிபி... சுலபமாகச் செய்யலாம்!
இட்லி பொடி
news18
Updated: April 16, 2019, 4:06 PM IST
இல்லத்தரசிகள் முதல் பேச்சுலர்ஸ் வரை இட்லிப் பொடி என்பது ஒரு வரம். எதுவும் இல்லாத பட்சத்தில் கமகமவென நல்லெண்ணெய் ஊற்றி டிஃபனை ஜமாய் செய்துவிடலாம். அதேபோல் இட்லிப் பொடியை அப்படியே தோசையில் தூவினால் பொடி தோசை.. அதிலேயே கொஞ்சம் வெங்காயம் தூவினால் வெங்காய தோசை... இப்படி பலவகைகளில் உதவக்கூடிய இந்த இட்லிப் பொடி இரகசியம் உங்களுக்குத் தெரியுமா? வீட்டிலேயே இட்லிப் பொடி செய்ய ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/4 கப்


சிவப்பு மிளகாய் - 20
பெருங்காயம் - தேவையான அளவு
வெள்ளை எள் - 1 tsp

Loading...

தேங்காய் துருவியது - 1 tsp
அரிசி - 1 tsp
எண்ணெய் - 2 tsp
உப்பு - தேவையான அளவுசெய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயக் கட்டி, வெள்ளை எள், தேங்காய்த் துருவல், அரிசி ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதைக் காற்றில் நன்கு ஆரவிட்டு வெப்பம் தனியச் செய்யவும்.

வெப்பம் தணிந்ததும் மிக்ஸியில் கொஞ்சம் மொரமொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான். மொருமொரு தோசைக்கு, மல்லிகை பூ இட்லிக்குப் பொருத்தமான இட்லிப் பொடி தயார்.

இதைக் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...