முகப்பு /செய்தி /lifestyle / இப்படி மாவு அரைத்தால் தோசை, இட்லி, ஆப்பம் பஞ்சு போல் சுடலாம்..! இன்னைக்கே டிரை பண்ணுங்க

இப்படி மாவு அரைத்தால் தோசை, இட்லி, ஆப்பம் பஞ்சு போல் சுடலாம்..! இன்னைக்கே டிரை பண்ணுங்க

இட்லி மாவு

இட்லி மாவு

மாவை இப்படி அரைத்துப் பாருங்கள். இட்லி சுடுவதில் நீங்கள்தான் கில்லி...!

  • Last Updated :

 இட்லி , தோசை , ஆப்பம் என்பது நம் இல்லங்களில் தவிர்க்க முடியாத காலை உணவு. காலை மட்டுமின்றி இரவு உணவிலும் இவை இடம் பெறும். இப்படி இரண்டு வேலையும் உண்ணக் கூடிய இந்த இட்லி தோசை சுவையாக இருந்தால்தானே தினமும் அதுவும் இரண்டு வேளை ருசித்து உண்ண முடியும். அதற்கு பெரிதாக மெனக்கெட வேண்டாம். சிம்பிள் ட்ரிக்ஸாக மாவை இப்படி அரைத்துப் பாருங்கள். இட்லி சுடுவதில் நீங்கள்தான் கில்லி...!

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 5 கப்

உளுந்து - 1 கப்

வெள்ளை அவல் - கால் கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

உப்பு - 3 ஸ்பூன்

செய்முறை :

அரிசி , உளுந்து , அவல் மூன்றையும் ஒரே கப்பில் அளவு எடுக்க வேண்டும்.

அரிசியை தனி பாத்திரத்திலும், அவல், உளுந்து வெந்தயம் மூன்றையும் ஒரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும். நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசியும் கலந்துகொள்ளலாம்.

முதலில் ஊற வைத்த உளுந்துக் கலவையை அரைக்கவும். உளுந்து கெட்டியாக பஞ்சு போல் உப்பி வரும். அவ்வாறு வந்தால் அரைத்துவிட்டதென அர்த்தம். அதை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

குழந்தைகளுக்கு விருப்பமான எலுமிச்சை சாதம் : இந்த மாதிரி வித்தியாசமா டிரை பண்ணி பாருங்க..!

அடுத்ததாக அரிசியை கொட்டி அரைக்கவும், அரிசி முற்றிலும் நைஸ் பதத்திற்கு அரைக்கக் கூடாது. சற்று மொறமொறப்பாக அரைக்க வேண்டும். அரைக்கும் போதே அதில் மூன்று ஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதோடு அரைத்த உளுந்தையும் கொட்டி கலந்து அரைத்தால் மிக்ஸிங் செய்யும் வேலை மிச்சமாகும்.

தற்போது அரைத்த மாவை தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். எட்டு மணி நேரம் வெளியே வைத்தால் மாவு புளித்து உப்பி வரும். பின் அதை இட்லியாகவும், தோசை , ஆப்பம் என விருப்பம் போல் சுட்டு சாப்பிடலாம்.

First published:

Tags: Food, Idli dosa batter