குழந்தைகளுக்கு ஏற்ற மிருதுவான இடியாப்ப உணவு.. செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் ஒன்று இடியாப்பம். இதை உண்டால் செரிமானமாவது எளிது. அத்துடன் இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைத்து செய்வதால் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாக இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்ற மிருதுவான இடியாப்ப உணவு.. செய்வது எப்படி?
இடியாப்பம்.
  • Share this:
குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் ஒன்று இடியாப்பம். இதை உண்டால் செரிமானமாவது எளிது. அத்துடன் இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைத்து செய்வதால் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு - ஒன்றரை கப்,


தண்ணீர் – அரை கப்,

நாட்டுச் சர்க்கரை -  தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - ஒரு மூடிஉப்பு - தேவையான அளவு,

நெய் - ஒரு டீஸ்பூன்

இடியாப்பம்


செய்முறை: அகலமான பாத்திரத்தில், ஒன்றரை கப் மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டுப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு மாவை நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். கையில் ஒட்டக்கூடாத பதத்திற்கு இருக்க வேண்டும். இந்தப் பதத்துக்கு வந்தபிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து இட்லித் தட்டில் பிழியவும்.

பிறகு, ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும். சாப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, நன்றாகக் கலந்து சாப்பிட வேண்டும்.

இத்துடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம். அசைவ பிரியர்கள் ஆட்டுக்கால் பாயாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மிகுந்ததாக இருக்கும்.

இட்லி, இடியாப்பம், ஆப்பம், ஊத்தாப்பம், கொழுக்கட்டை ஆகியவை குழந்தைகளுக்கான சிறந்த உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால் இவை அனைத்தும் ஆவியில் மட்டுமே வேக வைத்து செய்யக்கூடியவை.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading