• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் ’டிஃபன் சாம்பார்’ எப்படி செய்வது..? ரகசிய ரெசிபி இதோ..

வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் ’டிஃபன் சாம்பார்’ எப்படி செய்வது..? ரகசிய ரெசிபி இதோ..

ஹோட்டல் டிபன் சாம்பார்

ஹோட்டல் டிபன் சாம்பார்

ஹோட்டலில் காலை டிஃபனிற்கு பரிமாறும் சாம்பார் ரெசிபி உங்களுக்காக இதோ..

  • Share this:
    ஹோட்டல் உணவு ஆரோக்கியமானதா ஆரோக்கியமற்றதா என்கிற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் அதன் சுவையில் யாராலும் குறை சொல்ல முடியாது. அதே சுவையை வீட்டில் செய்து பார்க்க பலரும் விரும்புவார்கள். அந்தவகையில் ஹோட்டலில் காலை டிஃபனிற்கு பரிமாறும் சாம்பார் அசத்தலான சுவையில் இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வேக வைக்க :

    சிறு பருப்பு - 150
    துவரம் பருப்பு - 150 கிராம்
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    முருங்கங்காய் - 2
    மஞ்சள் தூள் - 1/2 tsp

    சமைக்க :

    நெய் - 1 tbsp
    புளி - 50 கிராம் புளி
    வெல்லம் - 50 கிராம்
    தக்காளி - 4
    கருவேப்பிலை/ கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 5 tbsp
    கடுகு - 1 tbsp
    வெங்காயம் - 3
    கட்டி பெருங்காயம் - 15 கிராம்
    சாம்பார் பொடி - 2 1/2 tsp



    செய்முறை 

    குக்கரில் வேக வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து 5 கிளாஸ் தண்ணீர் விட்டு ஐந்து விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.

    கடாய் வைத்து எண்ணெய் விட்டு நெய் விட்டு கருவேப்பிலை பொறிந்ததும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கி குழைந்ததும் புளி தண்ணீரை ஊற்று அதோடு வெல்லத்தையும் சேர்த்துவிட்டு கிளறுங்கள்.

    150 தண்ணீர் ஊற்றி 8 - 10 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க வையுங்கள். கொதித்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறிவிடுங்கள்.

    பின் மீண்டும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்துவிடுங்கள். அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.

    கொதித்து தேவையான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.



    பின் கடாய் வைத்து கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருகு சேர்த்து பொறிக்கவிடுங்கள்.

    பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். வதங்கியதும் சுடு தண்ணீரில் ஊற வைத்த பெருங்காய தண்ணீரை ஊற்றிவிட்டு உடனே அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    பின் சாம்பார் பொடி சேர்த்து அந்த எண்ணெய் சூட்டிலேயே நன்கு கிளறிவிடுகள்.

    பின் அதை அப்படியே இறக்கி வைத்த சாம்பாரி கொட்டி மீண்டும் அந்த சாம்பார் கடாயை அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி 1 ஸ்பூன் நெய் விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான டிஃபன் சாம்பார் தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: