ரெஸ்டாரண்ட் சுவையில் காலிஃப்ளவர் 65 செய்வது எப்படி ?

காட்சி படம்

வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் காலிஃப்ளவர் 65 இப்படி செய்யலாம்..

 • Share this:
  பேக்கரி , ரெஸ்டாரண்டுகளில் வாங்கும் காலிஃப்ளவர் 65 சிக்கன் சுவைக்கு இணையாக இருக்கும். அதை வீட்டில் செய்ய முயற்சித்தால் அதே பக்குவத்தில் வராது. இதற்கு நீங்கள் என்ன செய்வது என்பதை தெரிந்துகொள்ள கிழே உள்ள ரெசிபியை பாருங்கள்.

  தேவையான பொருட்கள் :

  காலிஃப்ளவர் - 1/2 கிலோ
  மஞ்சள் - 1/2 tsp

  ஊற வைக்க

  கடலை மாவு - 1 1/2 tsp
  மைதா - 1 1/2 tsp
  சோள மாவு - 1 1/2 tsp
  கரம் மசாலா - 1 tsp
  சிவப்பு மிளகாய் தூள் - 1 tsp
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
  எலுமிச்சை சாறு - சிறிதளவு
  உப்பு - தே.அ

     செய்முறை :

  காலிப்ளவரை சுத்தம் செய்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர் , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  Also read : 10 வகை பிரியாணி கேள்விப் பட்டிருக்கீங்களா..? சுடச்சுட பாருங்க...

  ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க மசாலா கலக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின் வேக வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டிவிட்டு கலந்துகொள்ளுங்கள். காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்கியிருக்க வேண்டும்.

  பின் 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொண்டு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

  அவ்வளவுதான் காலிஃப்ளவர் 65 தயார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: