வீட்டிலேயே மொறு மொறு ஹோட்டல் ரோஸ்ட் தோசை வேணுமா ? அரிசி மாவுடன் இதை மட்டும் சேர்த்தால் போதும்..

தோசை

நீங்கள் ஹோட்டலில் சாப்பிடுவது போல் வீட்டிலேயே மொறு மொறு தோசை தயார் செய்வதற்கு ஈஸியான டிப்ஸ் இதோ..

  • Share this:
தென்னிந்தியாவில்  காலை உணவுகள் என்றாலே இட்லி, தோசை, பொங்கல், பூரி ஆகியவை தான் பிரபலமானவை. அதிலும் முக்கியமாக ஹோட்டல்களில் இரண்டு கெட்டி சட்னி, வடையுடன் இட்லி மற்றும் தோசை பரிமாறுவது வழக்கம். இந்த காம்போவிற்கு வட இந்தியாவில் கூட ரசிகர்கள் உள்ளனர் என்று கூறலாம்.

ஹோட்டலில் பரிமாரப்படும் இட்லி சாம்பாருக்கும், மொறு மொறு தோசைக்கும் மயங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது. ஹோட்டல் சாம்பாரின் சுவை பிடித்த சிலர் வீட்டிலேயே ஹோட்டல் சாம்பரை செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் ஹோட்டலில் கொடுக்கப்படும் மொறு மொறு தோசையை வீட்டில் செய்தாலும் அதே மாதிரி ரோஸ்டாக வருவதில்லை.

எனவே ஹோட்டலில் செய்யப்படும் தோசை போல வீட்டிலேயே செய்ய உங்களுக்காக சில டிப்ஸ் இதோ..

நம் வீடுகளில் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவையே பயன்படுத்துகிறோம். இதை சற்று மாற்றினால் நீங்கள் எதிர்பார்க்கும் ஹோட்டல் தோசையை இரண்டே நிமிடத்தில் தயார் செய்யலாம்.

நீங்கள் மாவு அரைக்கும் போது வெந்தயம் கொஞ்சம் அதிகமாகவும், ஒரு பங்கு பச்சரிசி மற்றும் இரண்டு பிடி அவல் சேர்க்க வேண்டும். இதை சேர்த்து மாவு அரைத்தால் நீங்கள் எதிர்பார்க்கும் மொறு மொறு தோசையை வீட்டிலேயே செய்யலாம்.Also read :சப்பாத்தி நல்லா சாஃப்ட்டா வரனுமா..? மாவு பிசையும்போது இந்த 2 விஷயங்களை செய்தால் போதும்..!

அதே போல் இட்லி மாவில் நீங்கள் தோசை சுட்டால், ஒரு கரண்டி சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கிய பின் தோசை சுட்டால் ஹோட்டல் தோசை போல் ரோஸ்டாக தோசை வரும்.

இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து வீட்டிலேயே ஹோட்டல் தோசை சுட்டு சாப்பிடுங்கள்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: