ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஹோட்டல் ஸ்டைலில் ஃபில்டர் காபி போட சில டிப்ஸ்..!

ஹோட்டல் ஸ்டைலில் ஃபில்டர் காபி போட சில டிப்ஸ்..!

காபி

காபி

filter coffee | பாரம்பரியமான பில்டர் காபிக்கென்று ஒரு தனி சுவை உண்டு. அந்த வகையில் இன்று நாம் பாரம்பரியமான முறையில், வீடே கமகமவென்று மணக்கும் விதத்தில், பில்டர் காபியை வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பில்டர் காபியை எப்படி செய்தாலும் ஹோட்டலில் சாப்பிடுவது போல் வராது. இதற்கு காரணம் டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான். இந்த விகிதத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களையவும், நம்முடைய வீடுகளில் மணக்கும் அதே சுவையில் எப்படி பில்டர் காபி தயார் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்

பால் - 1/2 லிட்டர்

காப்பித்தூள் - 4 டீஸ்பூன்

காபி பில்டர்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை

1. பில்டரின் மேல் பாகத்தில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 4 டீஸ்பூன்  காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும்.

2. ஒரு கப் ( 200 மில்லி ) தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து காப்பித்தூளின் மேல் மெதுவாக ஊற்றவும். 15 நிமிடங்களில் பில்டரின் கீழ் பாகத்தில் டிகாஷன் இறங்கி விடும்.

3. பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். 150 மில்லி பால், 25 மில்லி டிகாஷன் என்ற அளவில் கலந்து தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நுரை வர ஆற்றி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்

1. இரண்டு வகையான பில்டர் காப்பித்தூள்களை வாங்கி ஒன்றாக கலந்து ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இதை வைத்து செய்தால் காபி நல்ல சுவையாக இருக்கும்.

2. காபி ஒரிஜினல் சுவையில் வேண்டுமென்றால் அன்று கறந்த பாலில் தயாரிக்கவும்.

3. பாலை அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. ஒரு கொதி வந்தாலே போதும்.

First published:

Tags: Coffee, Food