வெயிலுக்கு குளிர்ச்சியாக வாழைப்பழ ஐஸ்கிரீம் செய்யலாமா..?
”மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது வாழைப்பழம்”

வாழைப்பழம் ஐஸ்கிரீம்
- News18 Tamil
- Last Updated: April 11, 2020, 12:39 PM IST
வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கூலாக்கிவிடும்; புது உற்சாகம் பிறக்கும். இவை இரண்டும் ஒன்று சேரக் கிடைக்கும் வாழைப்பழ ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 1 சர்க்கரை அல்லது தேன் - 1 ஸ்பூன் ( தேவைப்பட்டால்)
காஃபி பொடி - 1/2 ஸ்பூன்
படிக்க: மளிகைப் பொருட்கள் , காய்கறிகளில் வைரஸ் பரவுமா..? பாதுகாப்பாக இருக்க என்ன வழி.?
செய்முறை :
வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதை ஃபிரீஸரில் 2 நிமிடங்கள் வையுங்கள்.
படிக்க: காய்கறி விலை உயர்வு கிறுகிறுக்க வைக்கிறதா...? சூப்பரான காராமணி குழம்பு செய்யலாம்...!
தற்போது நன்கு இறுகி இருக்கும். அதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு தேன் அல்லது சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வாசனைக்கு காஃபி பொடி சேர்க்கலாம். தற்போது இந்தக் கலவையை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் ஏதும் ஊற்றாமல் நன்கு குழைந்து வரும் வரை அரைத்துக்கொள்ளுங்கள்.
படிக்க: இரும்புச் சத்து அதிகரிக்க, ஜீரண சக்திக்கு உதவும் முருங்கைக் கீரை ரசம்..!
தற்போது ஐஸ்கிரீம் பதத்திற்கு வந்திருக்கும். அதை அப்படியே எடுத்து ஸ்பூன் போட்டு சாப்பிடலாம். குளிர்ச்சி கூடுதலாக தேவைப்பட்டால் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
பாதாம், காய்ந்த திராட்சைகள் இருந்தால் கூடுதல் சுவைக்காக மேலே தூவலாம்.
பார்க்க :
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 1