• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஓட்ஸ் கட்லெட் செய்யத் தெரியுமா..? இதோ ரெசிபி

ஓட்ஸ் கட்லெட் செய்யத் தெரியுமா..? இதோ ரெசிபி

கட்லெட்

கட்லெட்

ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு நல்லது. அதோடு இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். எனவே ஒட்ஸ் கட்லெட் மாலையில் குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் செய்து கொடுக்க நன்கு சாப்பிடுவார்கள்.

  • Share this:
    ஓட்ஸ் குழந்தைகள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவு. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு நல்லது. அதோடு இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். எனவே ஒட்ஸ் கட்லெட் மாலையில் குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் செய்து கொடுக்க நன்கு சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1 கப்
    பனீர் - 1/2 கப்
    கேரட் - 4 ஸ்பூன் ( சீவியது )
    உருளைக்கிழங்கு - 1கப்
    இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
    மிளகாய் தூள் -1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1 ஸ்பூன்
    உப்பு - தே.அ



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸ், மசித்த உருளைக்கிழங்கு , இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், கேரட், கரம் மசாலா, மிளகாய் தூள் என அனைத்தையும் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.

    Kidney Disease : உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லெட் அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கலாம்..! ஆய்வில் அதிர்ச்சி

    அடுத்ததாக பனீரையும் தூளாக்கி அதில் சேர்த்து பிசையுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    நன்கு பிசைந்துவிட்டு ஒரு உருண்டை அளவு கையில் எடுத்து உள்ளங்கையில் வட்டமாக கட்லெட் போல் தட்டுங்கள்.

    அடுத்ததாக தோசைக்கல் வைத்து எண்ணெய் ஊற்றி கல் காய்ந்ததும் தட்டிய மாவை ஒவ்வொன்றாக வையுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மொறுமொறுவென சிவந்ததும் மறுபுறம் திருப்புங்கள். இரண்டு புறங்களும் சிவக்க பொறித்ததும் எடுத்துவிடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக போட்டு எடுக்க ஓட்ஸ் கட்லெட் தயார்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: