• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நலம் பயக்கும் அவல் உப்புமா செய்வது எப்படி?

நலம் பயக்கும் அவல் உப்புமா செய்வது எப்படி?

அவல் உப்புமா

அவல் உப்புமா

அவலை வேக வைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் சீதபேதி போன்ற நோய்களுக்கும் நல்லது.

  • Share this:
தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட உப்புமா இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது.

உப்புமா பெரும்பாலும் ரவை கொண்டு செய்யப்படுகிறது. அரிசி ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சேமியா உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, பிரட் உப்புமா, ஓட்ஸ் உப்புமா, இட்லியை உதிர்த்து செய்யப்படும் இட்லி உப்புமா எனப் பலவகை உப்புமாக்கள் உள்ளன. இதில் இன்று சற்று வித்தியாசமாக அவல் உப்புமா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

அவல் - முக்கால் ஆழாக்கு

காய்ந்த மிளகாய் - 2

தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது

அவல்


செய்முறை:

அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்துக் கொண்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும். இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி. இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும். இது உடல் நலத்திற்கு நல்லது. இது அரிசியின் இன்னோரு பரிமாணம்தான். நிறம் தேவையென்றால் மஞ்சள் பொடி போட்டு சமைக்கலாம். அவல் உப்புமா பொன்னிறமாக இருக்கும்.

உடலுக்கு நன்மைகள் தரும் அவல்

அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று திண்ணலாம். ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் இந்த அவல் பயன்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: