ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்க வீட்டில் பிரெட் இருக்கா..? 10 நிமிடத்தில் நாவூறும் சுவையில் குலாப் ஜாமுன் செஞ்சு பாருங்க..!

உங்க வீட்டில் பிரெட் இருக்கா..? 10 நிமிடத்தில் நாவூறும் சுவையில் குலாப் ஜாமுன் செஞ்சு பாருங்க..!

குலாப் ஜாமுன்

குலாப் ஜாமுன்

லாக்டவுன் சமயத்தில் பலர் வீட்டில் குலாப் ஜாமுன் செய்ததாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டா, ட்விட்டர் என பகிர்ந்ததை தவிர்க்க முடியாது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குலாப் ஜாமும் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த லாக்டவுன் சமயத்தில் பலர் வீட்டில் குலாப் ஜாமுன் செய்ததாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டா, ட்விட்டர் என பகிர்ந்தனர். 

  அந்தவகையில் டிக்டாக்கில் பிரெட் துண்டுகளை வைத்து குலாப்ஜாமுன் எப்படி செய்வது என ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. எளிமையான் முறையில் எப்படி செய்வது?  அதன் ரெசிபி இதோ

  தேவையான பொருட்கள் 

  பிரெட் துண்டுகள்

  பால்

  தண்ணீர்

  எண்ணெய்

  நெய்

  சர்க்கரை

  செய்முறை

  பிரெட் ஓரங்களை நீக்கிவிட்டு வெள்ளைப்பகுதியை மட்டும் பால் ஊற்றி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். அதில் நெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக்கொள்ளுங்கள். அதை தற்போது சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.

  கடாயில் எண்ணெய் ஊற்றில் பிரெட் உருண்டைகளை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.

  @yasminali77#####♬ DIL DOOBA - AMITABH BACHCHAN,AKSHAY KUMAR,AISHWARYA RAI,AJAY DEVGAN

  பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயாரித்துக்கொள்ளுங்கள். அதில் இந்த பிரெட் உருண்டைகளை போட்டு 5 நிமிடங்கள் கழித்து எடுத்துப்பாருங்கள்.

  சுவையான குலாப் ஜாமுன் தயாராகியிருக்கும். அதை அப்படியே எடுத்து பரிமாறலாம்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Food