இன்னைக்கு ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள்..! எளிமையாக இருந்தாலும் அருமையாக இருக்கும்

இன்னைக்கு ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள்..! எளிமையாக இருந்தாலும் அருமையாக இருக்கும்

சுண்டல்

 • Share this:
  பச்சை பட்டாணி பல வகையான நன்மைகளைக் கொண்டது. அதை வைத்து சூப்பரான மொறு மொறு சுவையில் இப்படி மாலையில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

  தேவையான பொருட்கள்

  பச்சை பட்டாணி - 1 கப்
  வடை - 3
  மாங்காய் சீவியது - 1 1/2 tbsp
  கேரட் சீவியது - 1 tbsp
  பெரிய வெங்காயம் - 1
  உப்பு - தே.அ
  மிளகு தூள் - 1 சிட்டிகை
  கொத்தமல்லி - சிறிதளவு  செய்முறை :

  பச்சை பட்டாணியை காலை எழுந்ததுமே ஊற வைத்துவிடுங்கள். அப்போதுதான் மாலை வேக வைக்க முடியும்.

  மாலை ஊற வைத்த பட்டாணியை குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 3 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  மொறு மொறு சுவைக்கு வடை பிச்சி போட்டு தூவவது நல்ல சுவை தரும். எனவே கடலை பருப்பு ஊற வைத்து வடை சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

  ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் செய்யவேண்டுமா? இதோ ராஜ்மா கட்லெட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க..

  பட்டாணி வெந்ததும் அதை கரண்டியை பயன்படுத்தி ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளுங்கள்.

  மாங்காய் மற்றும் கேரட் சீவல் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.

  தற்போது வேக வைத்த பட்டாணியை ஒரு தட்டில் போடுங்கள். பின் அதன் மேலே சீவிய கேரட், மாங்காய், வெங்காயம் தூவுங்கள்.பின் சுட்ட வடைகளை பிச்சிபோட்டு அதன் மேல் தூவுங்கள். பின் கொத்தமல்லி தூவுங்கள்.

  அவ்வளவுதான் அப்படியே பரிமாறுங்கள். சாப்பிடும்போது ஸ்பூனில் கலந்துவிட்டு சாப்பிட்டுப் பாருங்கள். ருசி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.
  Published by:Sivaranjani E
  First published: