• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டிலேயே நெய் தயாரிப்பது இவ்வளவு ஈசியான வேலையா..? இனி அதிக விலை கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்..!

வீட்டிலேயே நெய் தயாரிப்பது இவ்வளவு ஈசியான வேலையா..? இனி அதிக விலை கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்..!

சுவை , மணம், உடல் நலம் என அனைத்து வகைகளிலும் நெய் உதவுவதால் என்னவோ அதன் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. அதுவும் அதன் அத்தியாவசியத் தேவைக் காரணமாக கலப்படங்களும் அதிகரித்துவிட்டன.

  • Share this:
இனிப்பு வகைகளுக்கு மட்டுமல்லாது காரசார உணவு வகைகளிலும் நெய் ஊற்றி சமைப்பது வாடிக்கையாகிவிட்டது. இதன் ஒரு துளி கூட அந்த உணவை கமகமக்கச் செய்யும். குறிப்பாக இது செரிமானத்திற்கு நல்லது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

இப்படி சுவை , மணம், உடல் நலம் என அனைத்து வகைகளிலும் நெய் உதவுவதால் என்னவோ அதன் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. அதுவும் அதன் அத்தியாவசியத் தேவைக் காரணமாக கலப்படங்களும் அதிகரித்துவிட்டன. இதையெல்லாம் தவிர்க்க நீங்கள் வீட்டிலேயே சுலபமாக நெய் தயாரிக்கலாம். எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்...

தேவையான பொருட்கள் :

உப்பு இல்லாத வெண்ணெய் - 500 கிராம்



செய்முறை :

அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் வெண்ணையை துண்டுகளாக்கி போடுங்கள்.

அது கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பிக்கும். தீயை மிதமாக வைக்க வேண்டும்.

பின் முற்றிலும் கரைந்து அதன் பால் திரவம் மேலே எழும்பி கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது கரண்டியால் 10 -15 நிமிடங்களுக்கு கிளறிக்கொண்டே இருங்கள்.

திருக்கார்த்திகைக்கு சொஜ்ஜி அப்பம் செய்து பாருங்களேன்!

அவ்வாறு செய்துகொண்டே இருக்கும்போது அதன் நிறம் தங்கம் கலந்த பிரவுன் நிறத்தில் மாறும்.

பின் 10 நிமிடங்களுக்கு மீண்டும் கொதிக்க வைத்தால் பாலின் திடமான திட்டுக்கள் அடியில் தங்கிவிடும்.

நெய் கமகமவென மணக்கும். முட்டைகள் உருவாகி கொதிக்கத் தொடங்கும். தெளிந்த நெய் கிடைக்கும். அவ்வளவுதான் நெய் ரெடி.

இதில் சிலர் வாசனைக்காக முருங்கை இலைகளையும் போடுவதுண்டு..அது உங்கள் விருப்பம்.

இதை இப்போது வடிகட்டி சுத்தமான பாட்டிலில் அடைத்து சேமித்து வையுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: