கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்து பாருங்கள்... எந்த குழம்புக்கும் பொருத்தமாக இருக்கும்

கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்து பாருங்கள்... எந்த குழம்புக்கும் பொருத்தமாக இருக்கும்
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
  • Share this:
கொத்தவரங்காய் இரும்புச்சத்து நிறைந்தது. கடலைப் பருப்பு புரதச்சத்து நிறைந்தது. அதை வைத்து தூள் கிளப்பும் கொத்தவரங்காய் பருப்பு உசிலி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கொத்தவரங்காய் - 300 கிராம்


மஞ்சள் - 1/4 tsp

ஊற வைத்து அரைக்க :

துவரம்பருப்பு - 1/2 கப்காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் பொடி-1/2 tsp

தாளிக்க :

நல்லெண்ணெய் - 3 tsp
கடுகு - 1tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
பெருங்காயத்தூள் - 1/4 tsp
கருவேப்பிலை - 2 கொத்துசெய்முறை :

ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

கொத்தவரங்காயை குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு, மஞ்சள் சேர்த்து 2 விசில் வர வேக வைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கிடையே மிக்ஸியில் தண்ணீரை இறுத்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் மிகவும் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.

பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்த பருப்பை தட்டில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

காலை உணவுக்கு ஹெல்தியான ஓட்ஸ் ஆம்லெட் - உடல் எடை குறைப்பவர்களும் சாப்பிடலாம்..!

பின் சூடு தணிந்ததும் அவற்றை உடைத்து உதிரிகளாக பிசைந்துகொள்ளுங்கள். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிந்ததும் கருவேப்பிலை சேருங்கள்.

பின் பருப்பு சேர்த்து வதக்குங்கள். அதன் ஈரப்பதம் வற்றியதும் வேக வைத்த கொத்தவரங்காயை தண்ணீரை இறுத்திவிட்டு கொட்டி கிளறுங்கள்.

உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். 2 நிமிடங்களுக்கு தட்டு போட்டு மூடி சிறு தீயில் வேக வையுங்கள். 2 நிமிடங்களுக்குப் பின் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார்.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading