ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டில் காய்கறி இல்லாத நாட்களில் இப்படி பூண்டு குழம்பு வையுங்கள்..!

வீட்டில் காய்கறி இல்லாத நாட்களில் இப்படி பூண்டு குழம்பு வையுங்கள்..!

பூண்டு , மற்றும் வெங்காயம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் என்கின்றனர். சிலருக்கு அதிக பூண்டு அல்லது வெங்காயம் ஒவ்வாமையை உண்டாக்கும். அதன் அறிகுறியாக நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, வயிறு அசௌகரியம், குடல் எரிச்சல், வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இவ்வாறு நீங்கள் அடிக்கடி உணர்ந்தால் உடனே மருத்தவரை அணுகு சிகிச்சைப் பெறுதல் நல்லது.

காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில் சிக்கனமாக சமைக்க இப்படி டிரை பண்ணி பாருங்க..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  காய்கறி விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இப்படி காய்கறி இல்லாமல் எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  அரைக்க

  எண்ணெய் - 2 tsp

  பூண்டு - 10 பற்கள்

  வெங்காயம் - கைப்பிடி அளவு

  காய்ந்த மிளகாய் - 4

  தனியா விதை - 2 tsp

  சீரகம் - 1 tsp

  வெந்தையம் - 1/4 tsp

  குழம்பு பொடி செய்ய

  மிளகு - 2 tsp

  தனியா - 4 tsp

  சீரகம் - 2 tsp

  காய்ந்த மிளகாய் - 3

  குழம்பு செய்ய 

  நல்ல எண்ணெய் - 3 tsp

  கடுகு - 1/2 tsp

  வெந்தையம் - சிறிதளவு

  சீரகம் - 1/4 tsp

  வெங்காயம் - 1/2 கப்

  பூண்டு - 1/2 கப்

  புளி - எலுமிச்சை அளவு

  செய்முறை :

  முதலில் குழம்பு பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

  அடுத்ததாக அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  தற்போது குழம்பு செய்ய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பின் வெங்காயம் அதோடு பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

  அரைக்காமல் வதக்காமல் இன்ஸ்டண்ட் சட்னி எப்படி செய்யலாம்..?

  வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும். வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.

  பின் தட்டுப்போட்டு மூடி 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கொதித்ததும் அரைத்து வைத்துள்ள குழம்பு பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  மீண்டும் சிறு தீயில் 10 நிமிடங்கள் வேக வையுங்கள். இறக்கும்போது அதன் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் தூவி இறக்கிவிடுங்கள்.

  அவ்வளவுதான் பூண்டு குழம்பு தயார்.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  பார்க்க:

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Recipe