மணக்கும் பூண்டு சட்னி : எப்படி செய்வது ?

சாதத்திற்கும் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளலாம்.

மணக்கும் பூண்டு சட்னி : எப்படி செய்வது ?
பூண்டு சட்னி
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 2:21 PM IST
  • Share this:
பூண்டு சட்னி இட்லி , தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சாதத்திற்கும் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 1 tbsp


கடுகு - 1 tsp
சீரகம் - 1/2 tsp
பெருங்காயத்தூள் - 1/4 tspஉளுத்தம் பருப்பு - 1 tsp
பூண்டு - 3/4 கப்

அரைக்க

தேங்காய் - 1 /4 கப்
கடுகு - 1.5 tsp
தக்காளி - 1
காய்ந்த காஷ்மீர் மிளகாய் - 3

புளி தண்ணீர் - 1 கப்
மஞ்சள் - 1/4 tsp
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறிய துண்டு



செய்முறை :

முதலில் பூண்டை உறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதை வதக்கிக்கொள்ள வேண்டும்.

கடாய் வைத்து என்னெய் விட்டு கடுகு , சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கியதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக சுருங்கும் வரை வதக்குங்கள். கருகக் கூடாது.

தவா சிக்கன் கறி : காரசாரமான சுவையில் செய்வது எப்படி..?

அடுத்ததாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து புளித்தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

கொதித்து வந்ததும் அரைத்த விழுதை கொட்டு கலக்குங்கள். தண்ணீர் இறுகி கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்குங்கள்.



மசாலா நன்கு சுருங்க வதக்கிக்கொண்டே இருங்கள். தேவைப்படும்போது எண்ணெய் கொஞ்சம் சுற்றிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்.

நன்கு சுருங்கியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பூண்டு சட்னி ரெடி...
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading