ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் வீட்டில்லேயே செய்ய ரெசிபி..!

ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் வீட்டில்லேயே செய்ய ரெசிபி..!

ஃப்ரெஞ்ச் ஃப்ரஸ்

ஃப்ரெஞ்ச் ஃப்ரஸ்

French Fries | உடல் எடை குறைவாக இருப்பவர்கள் இந்த ரெசிபியை சாப்பிட்டால் கண்டிப்பாக எடை அதிகரிக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்-ம் ஒன்று. இந்த ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை வீட்டிலேயே செய்வதற்கு மிக மிக எளிமையான முறை இருக்கிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

தக்காளி சாஸ் – தேவையான அளவு

செய்முறை: 

1. முதலில் உருளைக் கிழங்கை தோல் சீவி நீள வாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. பின்னர் உருளைக்கிழங்குடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

3. இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு எண்ணெயில் பொரிக்கும் போது கருக்காமல் வெள்ளையாக இருக்கும்.

4. உருளைக்கிழங்கை வடிகட்டி ஒரு டவலில் போட்டு ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும்.

5. இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடாகியதும் அதில் நறுக்கிய உருளைக் கிழங்கை போட்டு பொரித்தெடுக்கவும்.

6. அதன் மீது சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி தக்காளி சாஸீடன் பரிமாறலாம். இப்போது சுவையான ஈஸியாக வீட்டிலேயே செய்யக் கூடிய ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ரெடி.

First published:

Tags: Food, Potato recipes