கம கமவென மணக்கும் மீன் மசாலாப் பொடி..வீட்டிலேயே தயார் செய்ய டிப்ஸ்..

மீன் மசாலா பொடி

மீன் குழம்பு வைக்கும்போது கம கமவென மணக்கும் சுவையில் இந்த மசாலா பொடியை செய்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் போடுங்கள்.

  • Share this:
    அசைவ பிரியர்களுக்கு மீன் குழம்பு பிடித்த ஒன்றாகும்.அதுவும் வீட்டில் வைக்கும் மீன் குழம்பிற்கு தனி சுவை உண்டு.அப்படி உங்கள் வீட்டில் மீன் குழம்பு வைக்கும் போது இந்த மசாலா பொடியை ட்ரை பண்ணி பாருங்க.

    மீன் குழம்பு வைக்கும்போது கம கமவென மணக்கும் சுவையில் இந்த மசாலா பொடியை செய்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் போடுங்கள். குழம்பு ஆஹா ஓஹோவென இருக்கும்.



    தேவையான பொருட்கள் :

    காய்ந்த மிளகாய் - 10
    தனியா - 2 tsp
    சீரகம் - 1 tsp
    மிளகு - 1 tsp
    வெந்தையம் - 1/2 tsp
    சீரகம் - 1 /2 tsp

    செய்முறை :

    மேலே குறிப்பிட்ட பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    மொத்தமாக போட்டு வறுக்காதீர்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வெப்பம் பதம் தேவை என்பதால் மொத்தமாகப் போட்டால் ஏதாவதொன்று கருகிவிடலாம்.

    வறுத்ததும் அவற்றை சூடு தணிய ஆற வையுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் மொத்தமாக போட்டு மைய பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதில் சூடு தணிந்ததும் காற்றுபுகாத டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள்.

    அவ்வளவுதான் மீன் மசாலா பொடி தயார்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: