உடலுக்கு குளுர்ச்சி தரும் வெந்தையக் கீரை பருப்புக் கூட்டு - எப்படி சமைப்பது..?

Food Recipe |

உடலுக்கு குளுர்ச்சி தரும் வெந்தையக் கீரை பருப்புக் கூட்டு - எப்படி சமைப்பது..?
வெந்தையக் கீரை பருப்புக் கூட்டு
  • Share this:
வெந்தையக் கீரை குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் உடல் சூட்டைத் தனிக்க வெந்தையக் கீரை பருப்புக் கூட்டு செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெந்தையக் கீரை - 2 கப்


துவரம் பருப்பு - 1/2 கப்
பூண்டு - 4 பற்கள்
வெங்காயம் - 1எண்ணெய் - 1 1/2 tsp
நெய் - 1 tsp
கடுகு -1 tsp
சீரகம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
உப்பு - தே.அ
மஞ்சள் பொடி - 1/2 tsp
மிளகாய் பொடி - 1 tsp
தனியா பொடி - 1 tsp
கறிவேப்பிலை / கொத்தமல்லி - சிறிதளவு

தலைமுடிக்கு மட்டுமல்ல கண்பார்வை, மலச்சிக்கல் , சர்க்கரை நோயாளிக்கு நன்மை தரும் கறிவேப்பிலை குழம்பு : எப்படி வைப்பது..?

தாளிக்க :

எண்ணெய் - 1 tsp
சீரகம் - 1/4 tsp
பூண்டு - 4செய்முறை :

முதலில் துவரம் பருப்பை குக்கரில் போட்டு மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்துக்கொள்ளுங்கள். அடுப்பில் வைத்து 4 விசில் வந்து இறக்குங்கள். பின் மத்து வைத்து கடைந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் கடுகு , சீரகம் , காந்த மிளகாய், பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பூண்டு, இஞ்சி சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

முட்டையை ’ஹாஃப் பாயில்’ போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..?

வதங்கியதும் தக்களியை சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்கவும்.

பின் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து பிரட்டவும். கீரை நன்கு சுருங்க வதங்கியதும் கடைந்து வைத்துள்ள பருப்பை ஊற்றவும். உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொட்டுங்கள்.

அவ்வளவுதான் வெந்தையக் கீரை பருப்புக் கூட்டு தயார்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading