உங்க வீட்ல முட்டை இருக்கா..? அப்போ உடனே இப்படி செஞ்சு பாருங்க..!

முட்டையை வைத்து இப்படி ஃபிரைட் ரைஸ் செய்து சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். டிரை பண்ணி பாருங்க.

உங்க வீட்ல முட்டை இருக்கா..? அப்போ உடனே இப்படி செஞ்சு பாருங்க..!
முட்டை ஃபிரைட் ரைஸ்
  • Share this:
நீங்கள் முட்டை ஃபிரைட் ரைஸ் செய்து சாப்பிட்டுருக்கலாம். ஆனால் முட்டையை வைத்து இப்படி ஃபிரைட் ரைஸ் செய்து சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். டிரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்

முட்டை பீஸ் செய்ய


முட்டை - 5
உப்பு சிறிதளவு
மஞ்சள் - 1/4 tspஇடித்த மிளகு - 4

முட்டை வறுக்க :

சோளமாவு - 2 tsp
அரிசி மாவு - 2 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/4 tsp
உப்பு - தே அளவு
எண்ணெய் - வறுக்க

சாதம் பிரட்ட :

வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கோஸ் - 1 கப்
கேரட் - 1 கப்
குடை மிளகாய் - 1 கப்
முட்டை - 2
மிளகாய் தூள் 1/2 tsp
கரம் மசாலா - 1/2 tsp
மிளகுத் தூள் - 1/2 tsp
உப்பு - தே. அளவு
பாஸ்மதி அரிசி - ஒரு கப்செய்முறை :

பாஸ்மதி அரிசி வேக வைத்துக்கொள்ளவும்.

5 முட்டைகளை உடைத்து அதில் உப்பு மஞ்சள்,மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அதை ஒரு சின்ன பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஊற்றிக்கொள்ளவும். பின் பெரிய பாத்திரத்தில் அந்த சிறிய பாத்திரம் பாதியளவு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். தற்போது முட்டை கலவை ஊற்றிய பாத்திரத்தை தண்ணீரில் வைத்து மூடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்தால் முட்டை பஞ்சு போல் வெந்திருக்கும்.

அதை அப்படியே கவிழ்த்தால் கேக் போல் வரும். பின் அதை துண்டுகளாக வெடிக்கொள்ளவும்.

தினமும் தயிர் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?

பின் வறுக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கெட்டிப் பதத்தில் பிசைந்து முட்டைத் துண்டுகளை பிரட்டி, அதை மீன் வறுப்பது போல் வறுக்கவும். பொறிக்கக் கூடாது.

பொன்னிறமாக வறுத்ததும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக ஃபிரைட் ரைஸ் மிக்ஸிங்கிற்கு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் என கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை அடுத்தடுத்து போட்டு வதக்கவும். மசாலாக்களையும் சேர்க்கவும்.

அனைத்தையும் போட்டு வதக்கியதும் முட்டைகளை உடைத்து அதையும் வதக்கிக்கொள்ளவும்.

தற்போது அடுத்ததாக ஆற வைத்துள்ள பாஸ்மதி சாதத்தை கொட்டி பிரட்டவும். இறுதியாக வறுத்து வைத்துள்ள முட்டைத் துண்டுகளைப் போட்டு பிரட்டவும்.

அவ்வளவுதான் முட்டை ஃபிரைட் ரைஸ் ரெடி.

பார்க்க :

 
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading