• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ்... ஈஸியாக செய்யலாம் செட்டிநாடு முட்டை பணியாரம்....!

மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ்... ஈஸியாக செய்யலாம் செட்டிநாடு முட்டை பணியாரம்....!

முட்டை பணியாரம்

முட்டை பணியாரம்

செட்டிநாடு சுவையில் முட்டைப் பணியாரம் சமைத்து அசத்துங்கள்

  • Share this:
    செட்டிநாடு சுவையில் முட்டைப் பணியாரம் எப்படி செய்வது என கீழே உள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 3 கப்
    முட்டை - 3
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 4
    கருவேப்பிலை - 2 ஸ்பிரிங்
    புதினா - 6 ஸ்பிரிங்
    கடுகு - 1 tsp
    மஞ்சள் பொடி - 1/2 tsp
    மிளகு - 1 tsp
    தேங்காய் - 1/2 கப்
    உப்பு தே.அளவு
    எண்ணெய்

    முட்டை பணியாரம்


    செய்முறை :

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும். பொறிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கருவேப்பிலை, கடுகு, மஞ்சள் பொடி என கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

    இறுதியாக முட்டைகளை உடைத்து வதக்கவும்.

    பேக்கரியில் செய்யும் முட்டை பப்ஸ்... வீட்டில் குக்கரிலேயே செய்ய டிப்ஸ்..!

    பச்சை வாசனை போனதும் அடுப்பை அனைத்துவிட்டு அந்தக் கலவையை அப்படியே மாவில் சேர்த்துக் கலக்கவும். மாவுடன் கலவை நன்குக் கலந்திருக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

    பின் பணியாரம் தட்டு வைத்து அதில் எண்ணெய் தடவி மாவை பதமாக ஊற்றவும். அடுத்து மறுபுறம் பிறட்டி எடுக்கவும். இப்பை இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் முட்டை பணியாரம் தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது காரச்சட்னி பொருத்தமாக இருக்கும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: