சப்பாத்தி தோசைக்கு பொருத்தமான முட்டை ஆம்லெட் கிரேவி.. இரவு உணவை எளிதாக்குங்கள்.. ரெசிப்பி இதோ..

சப்பாத்தி, தோசைக்கு என்ன செய்வது என குழப்பமாக இருந்தால் சிம்பிளான முறையில் இதை செய்து கொடுங்கள்..!

சப்பாத்தி தோசைக்கு பொருத்தமான முட்டை ஆம்லெட் கிரேவி.. இரவு உணவை எளிதாக்குங்கள்.. ரெசிப்பி இதோ..
முட்டை ஆம்ளெட் கிரேவி
  • Share this:
சப்பாத்தி, தோசைக்கு என்ன செய்வது என குழப்பமாக இருந்தால் சிம்பிளான முறையில் அசத்தலான சுவையில் இந்த முட்டை ஆம்ளெட் கிரேவி செய்து கொடுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பொடி மாஸ் செய்ய:


முட்டை - 3
உப்பு - 1/4 tsp
மிளகாய் தூள் - 1/2 tspவெங்காயம் - 1 tbsp
கொத்தமல்லி - சிறிதளவு

கிரேவி செய்ய :

எண்ணெய் - 1 tbsp
சீரகம் - 1/2 tsp
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
தக்காளி - 2
உப்பு - தே.அ
மிளகாய் தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தனியா தூள் - 1 tsp
தயிர் - 1 tsp
கரம் மசாலா - 1/2 tsp
கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை

முதலில் பொடிமாஸ் செய்துகொள்ளுங்கள். அதற்கு ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். வெங்காயம் பொடியாக இருக்க வேண்டும்.

கடாய் வைத்து எண்ணெய் சிறிதளவு ஊற்றி கலக்கிய முட்டையை ஊற்றி பிரட்டுங்கள். பொடிமாஸ் போல் பிரட்டக் கூடாது. சிறு சிறு ஆம்ளெட் துண்டுகள் போல் பிரட்டுங்கள்.

முடித்ததும் முட்டையை தனியாக வைத்துவிடுங்கள்.

அடுத்ததாக கிரேவி செய்ய கடாய் வைத்து எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

ஹெல்தியான ஸ்னாக்ஸுக்கு கீரை வடை : எந்த கீரையிலும் செய்யலாம்... அருமையாக இருக்கும்

அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேருத்து வதக்குங்கள். வாசனை போனதும் தக்காளியை அரைத்து ஊற்றுங்கள்.

தக்காளியின் தண்ணீர் சுண்டியதும் மிளகாய் தூள் , மஞ்சள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலக்கிவிட்டு தட்டு போட்டு மூடிவிடுங்கள்.

3-4 நிமிடங்களுக்குக் கொதிக்கட்டும். கொதித்ததும் எடுத்து வைத்துள்ள முட்டையை தூவி போட்டு பிரட்டுங்கள்.

பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி 1 நிமிடம் அப்படியே விடுங்கள். பின் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் முட்டை ஆம்லெட் கிரேவி தயார்.

 

 

 

 

 
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading