தவிர்க்க முடியாத சுவை சாக்லெட் பிரவுனி

Web Desk | news18
Updated: February 28, 2019, 11:02 PM IST
தவிர்க்க முடியாத சுவை சாக்லெட் பிரவுனி
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 28, 2019, 11:02 PM IST
சாக்லெட் சுவை கொண்ட எந்த டெசர்ட் உணவும் சுவை மிகுந்ததுதான். எவ்வளவு உண்டாலும் சளிக்காதது சாக்லெட் பிரவுனி. பெரியவர்களைக் கூட குழந்தையாக மாற்றிவிடும் சுவை என்பதால் யாரேனும் பங்கு கேட்டால் கூட கொடுக்க மனம் வராது. அந்த அளவு சுவையால் கட்டிபோடும் சாக்லெட் பிரவுனி. சாப்பிட ஆசை வந்துவிட்டால்; இனி கடைக்கு போக வேண்டாம். சளிக்க சளிக்க வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மைதா - 3/4 கப்
சர்க்கரை - 1 கப்
பேக்கிங் சோடா - 1 1/2 tsp
கோகோ பவுடர் - 1/3 கப்
பட்டர் - 1/2 கப்
தயிர் -1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 tsp
சாக்லெட் சிப்ஸ் - 1/2 கப்செய்முறை :

  • பட்டரை உருக்கி பாத்திரத்தில் ஊற்றவும். சூடி தணிந்ததும் மைதா, சர்க்கரை (அரைத்துக் கொள்ளவும் ) பேக்கிங் சோடா , கோகோ பவுடர் ஆகிவற்றை நன்குக் கலந்து கொள்ளவும்.

  • அடுத்ததாக தயிர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தயிர் அறையின் வெப்ப நிலையில் இருக்க வேண்டும்.

  • தற்போது அந்தக் கலவையில் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.

  • கலவையை பட்டர் தடவிய பாத்திரத்தில் மாற்றி ஓவனில் வைக்க வேண்டும். ஓவன் இல்லாதவர்கள் இட்லி குக்கரிலும் வைக்கலாம். 35 முதல் 40 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

  • வெந்துவிட்டதா எனக் கண்டரிய பல் குச்சி வைத்து குத்தி எடுங்கள். உதிரியாக வந்தால் வெந்து விட்டது என அர்த்தம். மாவு பதத்தில் இருந்தால் மீண்டும் 5 நிமிடம் வேக வையுங்கள்.


தற்போது பிரவுனியை துண்டுகளாக்கி உச்சுக் கொட்டிக் கொண்டே சுவையுங்கள்.
First published: February 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...