சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் முட்டை கீமா தொக்கு செய்ய ரெசிபி இதோ...

முட்டை கீமா தொக்கு

எளிமையான வகையில் அரை மணி நேரத்திற்குள் சமைத்துவிடலாம். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

 • Share this:
  முட்டை கீமா தொக்கு சப்பாத்தி ஏற்ற பொருத்தம். இதை எளிமையான வகையில் அரை மணி நேரத்திற்குள் சமைத்துவிடலாம். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  முட்டை - 5
  எண்ணெய் - 1 tbsp
  மிளகு - 1/2 tsp
  வெங்காயம் - 2
  தக்காளி - 2
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
  மிளகாய் தூள் - 1 tsp
  கரம் மசாலா - 1 tsp
  மஞ்சள் - 1/4 tsp
  உப்பு - தே.அ
  தண்ணீர் - 1 1/2 கப்
  மிளகுத்தூள் - 1/4 tsp
  கொத்தமல்லி - சிறிதளவு  செய்முறை :

  முட்டைகளை வேக வைத்து எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

  வெந்ததும் தோலை உறித்துவிட்டு பொரியல் சீவ பயன்படுத்தும் பீலரில் முட்டைகளை சீவிக்கொள்ளுங்கள். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதக்கிக்கொள்ளுங்கள்.

  நன்கு வதங்கியதும் தூள் வகைகளை சேருங்கள். பின் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்குங்கள்.

  வெங்காயம், மாங்காய், கற்பூரவள்ளி என ஆரோக்கியமான வகையில் சுட்ட பகோடா : நகுல் மனைவியின் வீடியோ பதிவு..!

  அடுத்ததாக சீவி வைத்துள்ள வேக வைத்த உப்பை சேர்த்து கிளறி 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி தட்டுபோட்டு மூடி கொதிக்கவிடுங்கள்.

  தண்ணீர் சுண்டி வந்ததும் மிளகு , கொத்தமல்லி தழை தூவி 2 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறுங்கள்.

  முட்டை கீமா தொக்கு தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: