Home /News /lifestyle /

முட்டை காபி செய்ய ரெசிபி!

முட்டை காபி செய்ய ரெசிபி!

வறுத்த காபி பொடியுடன் முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய பானம் இந்த முட்டை காபி. சுவை மிகுதியாக இருக்கும். இது வியட்நாமின் பாரம்பரியமான பானம் ஆகும்.

முட்டையில் காபி செய்து சாப்பிட்டுருக்கீங்களா? ட்ரை பண்ணி பாருங்க. அப்புறம் இந்த ரெசிபியை விடவே மாட்டீங்க...

தேவையானவை :

சுடுநீர் – 3/4 கப்

முட்டை – 1

காபி – 1 டீஸ்பூன்

சர்க்கரை– 2 1/2  டீஸ்பூன்

செய்முறை

முதலில் சுடுநீரில் சர்க்கரையையும், காபியையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.  பின்னர் இன்னொரு கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்து வைத்துக் கொள்ளவும். இதில் கலந்து வைத்திருக்கும் காபியை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து சூட்டுடன் பருகலாம்.

இப்போது முட்டை காபி ரெடி. சுடுநீர் அதிக கொதியாக இருந்தால் முட்டை அவிந்து விடும். அதனால் மிதமான சூட்டிலேயே கலந்து கொள்ளவும். முட்டை விரும்பிகள் அனைவருக்கும் கண்டிப்பாக இந்த முட்டை காபி பானம் பிடிக்கும். காபியின் மணமும் முட்டையின் மணமும் சேர்ந்து நம்மை குடிக்க வைத்து விடும்.

மேலும் படிக்க... செவ்வாழை சாப்பிடுவதால் எவ்வளவு பயன்கள் கிடைக்கும் தெரியுமா?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coffee, Egg recipes

அடுத்த செய்தி