நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் முருங்கைக்காய் சாதம் - எப்படி செய்வது..?

ஜீரண சக்தி, ரத்தத்தை சீராக்குதல் , பாலியல் ஆரோக்கியம் என முருங்கைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் முருங்கைக்காய் சாதம் - எப்படி செய்வது..?
முருங்கைக்காய் சாதம்
  • Share this:
நோய் எதிப்பு சக்தி, ஜீரண சக்தி, ரத்தத்தை சீராக்குதல் , பாலியல் ஆரோக்கியம் என முருங்கைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட முருங்கைக்காய் சாதம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 5


வெங்காயம் - 3
தக்காளி - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
புளி - ஒரு துண்டு
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2செய்முறை :

முருங்கைக் காயை குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். விசில் வந்ததும், பிரஷர் போனதும் முருங்கைக்காய்களில் உள்ள சதைப் பகுதியை மட்டும் சுரண்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கடலைப் பருப்பு போட்டு வதக்குங்கள். பொன்னிறமாக வந்ததும் வெங்காயம் போட்டு வதக்குங்கள்.

பின் தக்காளி போட்டு வதக்குங்கள். பச்சை மிளகாயும் சேர்த்துக்கொள்ளவும். பின் தனியாக எடுத்து வைத்துள்ள முருங்கைக்காய் சதையை கொட்டி கிளறுங்கள். மஞ்சள் சேர்க்கவும்.

ஊற வைத்த புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அதிக தண்ணீர் வேண்டாம்.கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.தற்போது சிறு தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் வற்றியதும் வடித்த சாதத்தை போட்டு நன்குக் கிளறுங்கள். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் சாதம் ரெடி.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading