முருங்கை இலை சூப் : வாரத்தில் ஒரு நாள் கூட குடித்தால் போதும்..! ரெசிபி இதோ...

முருங்கை இலை சூப்

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் தூக்கமின்மைக்கு உதவுகிறது. உடலின் கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த முருங்கை இலை சூப்பும் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்லது.

 • Share this:
  முருங்கை இலைகள் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த கீரையாகும். இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு உதவும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் தூக்கமின்மைக்கு உதவுகிறது.

  உடலின் கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த முருங்கை இலை சூப்பும் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்ல வைத்தியமாக இருக்கும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  முருங்கை இலை - 1 1/2 கப்
  அரிசி தண்ணீர் - 2 கப்
  சாம்பார் வெங்காய்ம் - 5
  தக்காளி - 1
  பச்சை மிளகாய் - 1
  தேங்காய் பால் - 1 கப்
  சீரகம் - 1 tsp
  மிளகு - 1/2 tsp
  உப்பு - தே.அ  செய்முறை :

  அரிசி ஊற வைத்த தண்ணீரை முதலில் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

  நன்கு கொதிக்கும்போது சுத்தம் செய்த முருங்கை இலைகளை சேர்த்து கலந்துவிடவும். சிறிதி நேரம் கழித்து வெங்காயம் , தக்காளி , பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  பின் தட்டுப்போட்டு மூடி சிறு தீயில் முருங்கை இலை வேகும் வரை கொதிக்கவிடவும்.

  வெள்ளரிக்காய் லஸ்ஸி செய்து குடித்திருக்கிறீர்களா..? இன்றே டிரை பண்ணி பாருங்க..!

  முருங்கைக்கீரை வெந்ததும் தேங்காய் பால் கொஞ்சம் இடித்த மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து , தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

  தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் அதில் கொட்டவும்.

  அவ்வளவுதான் அடுப்பை அணைத்து பரிமாறி சாப்பிடவும். இது சளி, தொண்டைவலி, இருமலுக்கு இதமாக இருக்கும்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: