• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை பருப்பு சாதம் செய்து கொடுங்கள்...விரும்பி சாப்பிடுவாங்க...

குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை பருப்பு சாதம் செய்து கொடுங்கள்...விரும்பி சாப்பிடுவாங்க...

முருங்கைக்கீரை பருப்பு சாதம்

முருங்கைக்கீரை பருப்பு சாதம்

முருங்கைக்கீரை பருப்பு சாதம் செய்து அதன் மேல் நெய் ஊறி கொடுங்கள். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

  • Share this:
முருங்கைக்கீரை இரும்புச் சத்து நிறைந்தது. பருப்பு புரதச்சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு இவை இரண்டுமே அவசியம். இவை இரண்டையும் சுவை மிகுந்ததாக தர வேண்டுமெனில் இப்படி ருசியான ரெசிபிதான் உங்களுக்கு தேவை. முருங்கைக்கீரை பருப்பு சாதம் செய்து அதன் மேல் நெய் ஊறி கொடுங்கள். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 1
வெக்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 7 பல்
அரிசி - 1 டம்ளர்
பாசி பருப்பு - 1/2 டம்ளர்
தண்ணீர் - 5 டம்ளர்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தே.அ

தாளிக்க :

நெய் - 2 ஸ்பூன்
முந்திரி - தே.அ



செய்முறை :

முருங்கைக்கீரை சுத்தம் செய்து அலசிக்கொள்ளுங்கள். அரிசியை கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

குக்கர் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் , தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அனைத்தும் வெந்து பச்சை வாசனை போனதும் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுவைமிகுந்த வெடி தேங்காய் செய்வது எப்படி தெரியுமா?

உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள். பின் மூடி போடாமல் கொதிக்கவிடுங்கள். கொதி நிலை வரும்போது முருங்கை இலையை சேர்த்து கலந்துவிட்டு குக்கரை மூடிவிடுங்கள்.

இறுதியாக 2 விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடுங்கள். பின் தாளித்து குழந்தைக்கு கொடுங்கள். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் குழந்தை சாப்பிட்டுவிடும்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: