முருங்கைக்கீரை சாப்பிட்டால் உடலின் இரும்புச்சத்து அளவு அதிகரிக்கும். முட்டை உடலுக்கு தேவையான புரதசத்துகளையும் வைட்டமின் D -யையும் தருகிறது. எனவே இவை இரண்டை வைத்து எப்படி சுவையான பொரியல் செய்வது என பார்க்காலம்.
தேவையான பொருள்கள் :
முருங்கைக்கீரை - 3 கப்
முட்டை- 3
பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 tsp
சின்ன வெங்காயம் - 10
உப்பு : தே.அ
எண்ணெய் : தே.அ
செய்முறை :
முருங்கைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தை போட வேண்டும்.
பொறிந்தவுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அத்துடன் கீரையை சேர்க்க வேண்டும். கீரை வேகுவதற்கு ஏதுவாக தட்டைப் போட்டு மூடிவிடுங்கள்.
முருங்கைக்கீரை நன்றாக வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
இப்போது கீரையுடன் முட்டை நன்றாக கலந்திருக்க வேண்டும். அத்துடன் தேவையான உப்பு சேர்த்து சூடாக பரிமாறலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.