முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து சீராக வைக்க உதவும். இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
தேவையான பொருட்கள் :
புளித் தண்ணீர் - 1 கப்
முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி
பூண்டு - 5 பற்கள்
உப்பு - தே. அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 Tsp
பூண்டு - 4 பற்கள்
மிளகுப - 1 Tsp
கொதித்ததும் கீரையைப் போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
அடுத்ததாக பெருங்காயப் பொடி , சீரகம், மிளகு,பூண்டு , ஒரு தக்காளி என சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதை தற்போது கொதிக்கும் கீரையில் போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிக்க விடுங்கள். அடுத்ததாக கருவேப்பிலை சேர்த்து தாளித்து விடுங்கள்.
பின் ரசத்திற்கு பொங்கி வருவது போல் நுறை பொங்கி வரும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள்.
முருங்கைக் கீரை ரசம் தயார்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.