பலகாரம் , இனிப்பு வகைகள் இல்லாமல் தீபாவளியே கிடையாது. மகிழ்ச்சிக்கான அடையாளங்களில் ஒன்று இனிப்பு வகைகளும்தான். அந்த வகையில் தீபாவளி பலகாரம் லிஸ்டில் முக்கிய இடம் பிடிக்கும் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/2 கப்
கருப்பு வெல்லம் - 1 கப்
கருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப்
எண்ணெய் - வறுக்க
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீர் வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும்.
அரைத்ததும் ஜல்லடையில் மாவை பொடித்துக்கொள்ளவும். இதனால் உதிரி மாவுகளை தவிர்க்கலாம்.
அடுத்ததாக வெல்லத்தை கடாயில் உருக வையுங்கள். வெல்லம் உருகுவதற்கு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுவது போதுமானது. கெட்டி பதத்திற்கு உருக வைக்காமல் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கி விடவும்.
அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக்கொள்ளவும்.எள்ளை மாவில் கலந்துகொள்ளவும். அடுத்ததாக உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.
ஒருவேலை மாவில் தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.
சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன் தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
ஹோட்டல் சுவையில் அதே பக்குவத்தில் ’டிஃபன் சாம்பார்’ எப்படி செய்வது..? ரகசியம் இதோ..!
பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க நெய் தொட்டுக்கொள்ளவும்.
அடுத்ததாக எண்ணெய்யை கடாயில் ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வ்ந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும்.
எனவே நன்கு வறுத்தெடுக்கவும்.
வறுக்கும்போது சில சமயத்தில் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பாதுகாப்புடன் கையாளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.