தீபாவளி பலகாரம் என்றாலே முதலிடம் பெறுவது முறுக்குதான். முறுக்கு எப்படி சுவையாகவும், பதமாகவும் சுடுவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தண்ணீர் - 1 கப்
உப்பு - 1/2 tsp
நெய் - 2 tsp
அரிசி மாவு - 1 கப்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கருப்பு எள் -1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
செய்முறை
கடாய் வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். ஒரு கொதி வந்ததும் அதில் உப்பு , நெய் விட்டு கலந்துவிடுங்கள். பின் அரிசி மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
கலந்ததும் எள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிடுங்கள்.
மிதமான தீயில் மாவை கிண்டிக்கொண்டே இருங்கள். சப்பாத்தி சுடும் பதத்திற்கு மாவின் தண்ணீர் இறுகியதும் அடுப்பை அணைத்துவிட்டு மற்றொரு கிண்ணத்தில் கொட்டிவிடுங்கள்.
அதன் சூடு தனியும் வரை அப்படியே விட்டு சூடு ஆறியதும் நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து முறுக்கு சுட எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
காய்ந்ததும் மாவை முறுக்கு சுடும் குழாயில் மாவை எலுமிச்சை அளவு பிடித்து அதில் வையுங்கள். பின் குழாயை அழுத்தி பிடித்தவாறு வட்டமாக மாவை சுற்றுங்கள். அதை அப்படியே எடுத்து காய்ந்துள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சுட்டு எடுங்கள். அவ்வளவுதான் மொறு மொறு தீபாவளி முறுக்கு தயார்.