தீபாவளி லேகியம் என்பது வயிறு கோளாறுகளை சரி செய்ய உதவக்கூடியது. இதை ஏன் தீபாவளி அன்று சாப்பிட வேண்டும் என்பதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய் பலகாரங்கள், ஸ்வீட் வகைகள், உணவு என நிறைய சாப்பிடுவதால் அஜீரணம் , வயிற்று மந்தம் உண்டாகலாம். எனவே இதை காலையிலேயே சாப்பிட்டுவிடுவதால் அந்த தொல்லைகள் இருக்காது.
இரண்டாவது காரணம் தீபாவளி மழைக்காலத்தில் வருவதால் மழைத்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க மசாலாக்களை பயன்படுத்தி இந்த லேகியம் கொடுக்கப்படுகிறது. அதனால் இதற்கு தீபாவளி மருந்து என்றும் பெயர் உண்டு. சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தனியா, மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை தொடக்கூடிய சூடு பதத்தில் 2 - 3 நிமிடங்கள் கடாயில் போட்டு வாட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இறுதியாக இஞ்சி சேர்த்து வதக்கிவிட்டு சூடு பதத்தை காய வையுங்கள். பின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
மற்றொரு கடாய் வைத்து தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு உருக வைத்து வெல்லப்பாகு தயார் செய்துகொள்ளுங்கள். வெல்லம் உருகியதும் வடிகட்டி மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.