• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தீபாவளி லேகியம் கடையில்தான் வாங்குறீங்களா..? வீட்டிலேயே செய்யலாம்... சிம்பிள் ரெசிபிதான்..!

தீபாவளி லேகியம் கடையில்தான் வாங்குறீங்களா..? வீட்டிலேயே செய்யலாம்... சிம்பிள் ரெசிபிதான்..!

தீபாவளி லேகியம்

தீபாவளி லேகியம்

தீபாவளி மழைக்காலத்தில் வருவதால் மழைத்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க மசாலாக்களை பயன்படுத்தி இந்த லேகியம் கொடுக்கப்படுகிறது. அதனால் இதற்கு தீபாவளி மருந்து என்றும் பெயர் உண்டு.

  • Share this:
தீபாவளி லேகியம் என்பது வயிறு கோளாறுகளை சரி செய்ய உதவக்கூடியது. இதை ஏன் தீபாவளி அன்று சாப்பிட வேண்டும் என்பதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய் பலகாரங்கள், ஸ்வீட் வகைகள், உணவு என நிறைய சாப்பிடுவதால் அஜீரணம் , வயிற்று மந்தம் உண்டாகலாம். எனவே இதை காலையிலேயே சாப்பிட்டுவிடுவதால் அந்த தொல்லைகள் இருக்காது.

இரண்டாவது காரணம் தீபாவளி மழைக்காலத்தில் வருவதால் மழைத்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க மசாலாக்களை பயன்படுத்தி இந்த லேகியம் கொடுக்கப்படுகிறது. அதனால் இதற்கு தீபாவளி மருந்து என்றும் பெயர் உண்டு. சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தனியா விதை - 1 tsp
மிளகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
ஓமம் - 1/2 tsp
காய்ந்த இஞ்சி - 1/4 tsp
நல்லெண்ணெய் - 1 tsp

வெல்லப் பாகு செய்ய :

வெல்லம் - 1/3 கப்
தண்ணீர் 1/4 கப்



செய்முறை :

தனியா, மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை தொடக்கூடிய சூடு பதத்தில் 2 - 3 நிமிடங்கள் கடாயில் போட்டு வாட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இறுதியாக இஞ்சி சேர்த்து வதக்கிவிட்டு சூடு பதத்தை காய வையுங்கள். பின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

மற்றொரு கடாய் வைத்து தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு உருக வைத்து வெல்லப்பாகு தயார் செய்துகொள்ளுங்கள். வெல்லம் உருகியதும் வடிகட்டி மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

Diwali Snacks : தீபாவளிக்கு அதிரசம் செய்ய தயாராகிட்டீங்களா..? அதற்கு முன் இந்த டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்...

கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் அரைத்த பொடியை கிளறிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள். கட்டிகளாக இருக்கக் கூடாது.

நன்கு கலந்துவிட்டதும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். இறுதியாக நல்லெண்ணெய் விட்டு உடனே அடுப்பை அணைக்க வேண்டும்.

அவ்வளவுதான் அதை சூடு பதத்திலேயே ஒரு டப்பாவில் மாற்றிவிட்டு சூடு ஆறியதும் மூடிவிடுங்கள். பின் அதை தீபாவளி காலை வீட்டில் அனைவரும் பகிர்ந்து சாப்பிடலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: