• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சுவையான கோதுமை மாவு அப்பம்..10 நிமிடத்தில் செய்திட ரெசிபி...

சுவையான கோதுமை மாவு அப்பம்..10 நிமிடத்தில் செய்திட ரெசிபி...

கோதுமை அப்பம்

கோதுமை அப்பம்

வீட்டிற்கு திடீரென யாராவது விருந்தாளிகள் வந்தால் சுலபமாக இந்த அப்பம் செய்து கொடுத்தால் போதும்... உங்களை பாராட்டி விட்டுதான் போவார்கள்... இதனை ஈஸியாகவும் 10 நிமிடத்திலே செய்து முடித்து விடலாம்...|

  • Share this:
கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் இந்த அப்பம் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானதாக இருக்கும். மாலை நேரத்தில் டீயுடன் இந்த அப்பம் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்... வாங்க எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம்...

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி

வெல்லம் - 1/2 கப்

வாழைப்பழம் - 1

ஏலக்காய் - 1

சமையல் சோடா - 1 சிட்டிகை

உப்பு - 1 சிட்டிகை

எண்ணெய் அல்லது நெய் - பொறிக்க தேவையான அளவு

கோதுமை


செய்முறை

முதலில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும். வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து பிழைந்து கொள்ளவும். வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும்வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். இப்போது சுவையான கோதுமை அப்பம் ரெடி.

மேலும் படிக்க... இனி தினமும் உங்கள் முதல் உணவு இப்படி இருக்கட்டும்...

தக்காளி மசாலா பூரி ரெசிபி...

காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

 சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: