ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுவையான சோமாஸ் எப்படி செய்வது?

சுவையான சோமாஸ் எப்படி செய்வது?

சுவையான சோமாஸ்

சுவையான சோமாஸ்

Somas Recipe: சோமாஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொண்டு ட்ரைப் பண்ணிப்பாருங்க...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொதுவாக சோமாஸ் திண் பண்டம் தீபாவளிக்குதான் செய்வார்கள்... ஆனால் இப்போது நினைத்தவுடன் பெண்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து தருகின்றனர். 

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்

உப்பு - தேவையான அளவு

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

பொட்டுக்கடலை - 1/2 கப்

சர்க்கரை - 1 கப்

முந்திரி - 10

ஏலக்காய் - 4

கசகசா - 1 டீஸ்பூன்

தேங்காய் பூ - 1 டீஸ்பூன்(விருப்பமானால்)

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

பூரணம் செய்ய:

1. முதலில் வெறும் வாணலியில் ரவை, பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா இவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். தேங்காய்ப் பூ போடுவதாக இருந்தால் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

2, இவை அனைத்தும் ஆறியதும் இவற்றுடன் சர்க்கரை, பொடித்த ஏலம் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்போது பூரணம் தயார்.

செய்முறை:

1. முதலில் மைதா மாவுடன் உப்பைப் போட்டு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.பூரி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்.

2. இப்போது மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து அதை சோமாஸ் கரண்டியில் வைத்து தேவையான பூரணத்தையும் வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி கரண்டியை அழுத்தி மூட வேண்டும்.

Also see... குழந்தைகள் விரும்பும் ’பேபி கார்ன் பனீர் மசாலா’

3. கரண்டியை மூடிய பிறகு ஓரத்தில் உள்ள அதிகப்படியான மாவை எடுத்து விடவேண்டும். இப்போது கரண்டியைத் திறந்து சோமாஸை எடுத்து மூடி வைக்கவும். இது போலவே எல்லா மாவையும் போட்டு வைத்துக்கொள்ளவும்.

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து சோமாஸை ஒவ்வொன்றாகவோ எண்ணெய்யில் போட்டு ஒருபுறம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும். ஆறியதும் கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்...

First published:

Tags: Food, Sweet recipes