ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சாட் உணவுகளில் மிக்ஸ் செய்ய உதவும் பேரிட்சை மற்றும் புளி சட்னி: ரெசிபி இதோ...

சாட் உணவுகளில் மிக்ஸ் செய்ய உதவும் பேரிட்சை மற்றும் புளி சட்னி: ரெசிபி இதோ...

புளி மற்றும் பேரிட்சை சட்னி : இனிப்பும், புளிப்பும் கலந்த ஒரு சட்னி உங்கள் நாவின் சுவை மண்டலத்தை தூண்டுவதாக அமையும். நாவில் நிச்சயமாக எச்சில் ஊற வைக்கும். புளியம் பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். பேரீட்சை பழத்தில் இரும்புச்சத்து கூடுதலாக உள்ளது. இந்த சட்னியுடன் சீரக தூள், மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த இந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புளி மற்றும் பேரிட்சையில் செய்யப்படும் இந்த சட்னியானது மசாலா பூரி, பேல் பூரி, பானி பூரி போன்ற சாட் உணவுகளுக்கு சுவை கூட்டியாக பயன்படுகிறது. இதை சிலர் சமோசாவிற்கும் தொட்டுக்கொள்வார்கள். இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த இந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பேரிச்சை - 250 கிராம்

காய்ந்த இஞ்சி - 1 Tsp

புளி - 20 கிராம்

மிளகாய் தூள் - 1/2 Tsp

உப்பு - 2 Tsp

செய்முறை :

பேரிச்சையை தண்ணீரில் 2 - 3 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு மைய அரையுங்கள்.

விரைவாக எடையை குறைக்க ஓட்ஸை எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?

பின் இஞ்சி , புளி , மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

அவ்வளவுதான் சட்னி தயார்.

First published:

Tags: Chat Recipes, Chutney, Snacks