தலைமுடிக்கு மட்டுமல்ல கண்பார்வை, மலச்சிக்கல் , சர்க்கரை நோயாளிக்கு நன்மை தரும் கறிவேப்பிலை குழம்பு : எப்படி வைப்பது..?

கறிவேப்பிலை குழம்பு குடல் கிருமிகளை அழிக்க வல்லது.

தலைமுடிக்கு மட்டுமல்ல கண்பார்வை, மலச்சிக்கல் , சர்க்கரை நோயாளிக்கு நன்மை தரும் கறிவேப்பிலை குழம்பு : எப்படி வைப்பது..?
கறிவேப்பிலைக் குழம்பு
  • Share this:
கறிவேப்பிலை தலைமுடி, சருமப் பாதுகாப்பிற்கு நல்லது என்பதே பலருக்கும் தெரியும். ஆனால் அது செரிமானத்திற்கு நல்லது, கண் கூர்மையாக உதவும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. குடல் கிருமிகளை அழிக்க வல்லது. இதை வைத்து எப்படி கறிவேப்பிலைக் குழம்பு வைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - 1 கப்


சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவுமிளகாய் தூள் -1 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
தனியா பொடி - 2 tsp
எண்ணெய் - 2 1/2 tsp
கடுகு - 1 tsp

பீட்ரூட் கோலா உருண்டை : ருசியா இருக்கும் சாப்பிட்டுப் பாருங்க..!



செய்முறை :

கறிவேப்பிலையை அலசி மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

புளியை 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். அதை தண்ணீரை தனியாக பிழிந்துகொள்ளுங்கள்.

தக்காளியையும் அரைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு பொறிக்க விடுங்கள்.

பொறிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

வதங்கியதும் கறிவேப்பிலை பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். அடுத்து தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசிக்க ’அவல் கட்லெட்’ - செய்முறை இதோ...!

நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள்.

தற்போது புளித் தண்ணீரை ஊற்றுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

மசலாவை நன்கு கலக்கிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்து கொத்தம்மல்லி தழை தூவி இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் கறிவேப்பிலை குழம்பு தயார்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading